"I think this is my masterpiece"
A film by Quentin Tarrantino.
இன்ங்லோரியஸ் பாஸ்டர்ட்ஸை எட்டாவது முறையாக பார்த்து முடித்ததும் லேப்டாப்பை மூடிவைத்து விட்டு ஜன்னைலை திறந்தேன், கிழக்கு சிவந்திருந்தது. கொட்டாவி விட்டுக்கொண்டே சோம்பல் முறித்தேன். படுக்கையில் தேடி கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன், மணி 5.30. எழுந்து பர்சை எடுத்து பாக்கெட்டில் திணித்துக்கொண்டு ரூமிலிருந்து வெளியே செல்கையில் செல்வத்தின் காலை மிதித்துவிட்டேன். அவன் முனகிக்கொண்டே புரண்டு படுத்தான். வெளியே வந்து பார்க்கும்போது வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. நாயர் கடைக்கு சென்று ஒரு டீ சொல்லிவிட்டு ஒரு சிகெரெட்டை வாங்கி வாயில் வைத்து லைட்டைரை தேடினேன்.
”நாயரேட்டா லைட்டர் எவடயா?”
“ கழுவேரிட மோன் எவனோ பொக்கிக்கோண்டு போயடா, இந்நா” என்று என்னிடம் தீப்பெட்டியை வீசினார். உள்ளே ஒரே ஒரு தீக்குச்சி மட்டுமே இருந்தது. எடுத்து சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு கடையின் வலப்புறம் சென்று நின்றேன். ஒரு லைட்டருக்காக நாயர் அப்படி திட்டியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. பின் அவர் திட்டயது லைட்டருக்காக அல்ல திருட்டுக்காக என்று புரிந்தது. சொல்லமுடியாது அவரே மறதியில் எங்கேனும் வைத்திருக்கலாம்.
நாயர் என்னிடம் டீயை கொடுத்தார். நான் வாங்கிக்கொண்டேன், என் கண்கள் செய்தித்தாள்களை தேடின.
“பேப்பர் இனியும் வந்நட்டில்லடா” என்றார் நாயர். நான் தலையாட்டிவிட்டு டீயைக் குடிக்கத் தொடங்கினேன்.
துர்கை அம்மன் கோவிலில் மணியடிக்கும் சத்தம் கேட்டு கோவிலை ஏறிட்டேன். கருநீல புடவை கட்டிய பெண்ணொருத்தி கோவிலிலிருந்து வெளியே வந்தாள். (இனி நடப்பதை slow motionல் கற்பனை செய்துகொள்ளவும்) வெளிய வந்தவள் திரும்பி கோவிலுக்குள் நோக்கி தன் சுட்டுவிரலை மடக்கி முத்தமிட்டாள். பின் காலணிகளை மாட்டிக்கொண்டு நாயர் கடை பக்கம் வந்தாள். காற்றில் அலைபாயும் கூந்தல், கழுத்தில் id card, தோளில் மாட்டிய handbag சகிதம் ஒரு அழகி நடந்து வரும்போது, பரட்டை தலையுடன் பல் கூட துலக்காமல் ஒரு கையில் டீ மறுகையில் சிகெரட் சகிதமாய் நிற்பது ஒரு மாதிரி சங்கடமாய் தானிருந்தது. ஆனால் ஒய்யாரமாய் மயிலென அவள் நடந்துவருவதைக் கண்டு அதையெல்லாம் மறந்தேன். அவள் வயது, எடை, உயரத்தையெல்லாம் கணக்கிடும் அளவிற்கு எனக்கு மதிநுட்பமில்லாததால் மேற்கொண்டு அவளை வர்ணிக்கமுடியவில்லை. அவள் அழகி. அழகி என்றால் சாதாரன அழகியல்ல, அழகிக்கும் பேரழகிக்கும் இடைப்பட்ட ஓர் அழகு. பார்த்தவுடன் எந்த யோசனையுமின்றி காதலிக்கலாம். நேரே கடைமுன் வந்து நின்றாள் (slow motion ends).
அவளைப் பார்த்து நாயர் சினேகமாக சிரித்தார். அவளும் பரிச்சயமாக புன்னகைத்தாள். அவள் கேட்காமலேயே நாயர் அவளிடம் காபியை கொடுத்தார். வாங்கிக்கொண்டவள் இரு கைகளாலும் பொத்திப்பிடித்து பருகத்தொடங்கினாள். தேவதை என்று ஒன்று இருந்தால் அது இப்படித்தான் காபி குடிக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
கடைக்குள்ளே சென்ற நாயர் திரும்பி அவளிடம் வந்து ஒரு சிகெரெட்டை நீட்டினார். சிகரெட்டை வாங்கிக்கொண்டவள் காபியை அருகே வைத்துவிட்டு பையிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் தாளை நாயரிடம் கொடுத்தாள். நாயர் சில்லரை இல்லையா என்று கேட்க அவள் இடவலமாக தலையசைத்தாள்.
நாயர் அவளிடம் இருந்து காசை வாங்கிக்கொண்டு எதிரிலிருக்கும் கடைக்கு சில்லரை மாற்றிக்கொண்டு வர போனார். சிகெரட்டை வாயில் வைத்து தீப்பெட்டியை திறந்தவள் பெட்டியில் தீக்குச்சி இல்லாததால் திரும்பி நாயரைப் பார்த்தாள். அவர் இன்னும் வந்திருக்கவில்லை. திரும்பி கடைக்குள் பார்த்தவள் பார்வை என்னிடம் திரும்பியது. என் கையிலிருந்த சிகெரெட்டை கவனித்தவள் அருகில் வந்து
”match box இருக்கா?” என்றாள்.
நான் இல்லையென தலையசைக்க, கையில் இருந்த சிகெரெட்டைப் பார்த்தாள். நான் என் கையை நீட்ட, என் கையிலிருந்து சிகெரெட்டை வாங்காமல் அப்படியே அவள் சிகெரெட்டை பற்ற வைத்துக்கொண்டாள்.
“thanks" என்று சிரித்தவள். திரும்பி சென்று காபியை ஒரு கையில் எடுத்துக்கொண்டு கடைக்கு இடப்புறம் இருந்த மறைவான இடத்தில் போய் நின்றுகொண்டாள்.
சில்லரை வாங்கிவந்த நாயர் அவளிடம் மீதி பனத்தைக் கொடுக்க சிகெரெட்டை வாயில் வைத்துக்கொண்டு காசை வாங்கி பையில் போட்டுக்கொண்டு சிகெரெட்டை எடுத்துவிட்டு காபியை குடித்தவள் அதன் பின்னர் புகையை வெளியே விட்டாள். சென்னை வந்த பின்னர் பெண்கள் புகைப்பிடப்பதை பலமுறைப் பார்த்திருந்தாலும் இந்த வித்தையை நான் வியந்த வண்ணம் பார்க்க அவள் மீண்டும் புகையை உள்ளிழுத்துக் கொண்டு காபியை விழுங்கிய பின்னர் புகையை வெளியே விட்டாள். இத்தனை நாட்களில் இதை ஒருநாள் கூட முயன்றதில்லையே என்று நானும் அதேபோல் செய்ய புரையேறியது போல் இருமல் வந்தது. அவள் அசட்டையாக என்னை பார்த்து விட்டு திரும்பினாள். நான் தேவதை என்று ஒன்று இருந்தால் அது இப்படித்தான் புகைப்பிடிக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.