அந்த வருஷம் பொங்கலுக்கு ரிலீசான ஒரு படத்த எப்படியாவது முதல் நாளே பாத்துடனும்னு நானும் ஸ்ரீநாத்தும், நெட் பிராக்டீஸ சீக்கிரம் முடிச்சுட்டு புறப்பட்டோம். மணி 2:00 ஆச்சு, 2:45க்கு ஷோ. அவசர அவசரமா கிட் பேக்ல எல்லாத்தயும் எடுத்து போட்டுட்டு கிளம்புறப்போ “jog 2 rounds” கோச் கத்துனாரு. கிட் பேக அப்படியே போட்டுட்டு ஓட ஆரம்பிச்சோம். ஜாகிங் எல்லாம் இல்ல, நாய் துரத்துன மாதிரி தல தெறிக்க ஓடினோம். ரெண்டு ரவுண்ட் முடியும்போது மணி 2:15. உடனே கிட் பேக தூக்கீட்டு ஸ்டேடயத்தோட அடுத்த பக்கத்துல இருந்த வாசலுக்கு மறுபடியும் ஓடிப்போய் பஸ் ஏறினோம்.
காந்தி ஸ்டேடியத்தில் இருந்து சேலம் பழைய பஸ் ஸ்டேண்டுக்கு போக சரியா 5 நிமிஷம் தான். ட்ராபிக் இருந்தா 10. நடந்தே கூட போலாம். ஆனா நேரம் இல்ல. நாங்க பஸ் ஸ்டேண்ட் போய் சேறும்போது மணி 2:25. பஸ் நிக்குறதுக்கு முன்னாடி ரன்னிங்க்லயே இறங்கி ஓட ஆரம்பிச்சோம்.
சரியா 2:30க்கு கீதாலயா தியேட்டர் வாசல்ல இருந்தோம். ஏகப்பட்ட கூட்டம். டிக்கட் கிடைக்குமான்னே தெரியல. ஸ்ரீநாத் “வீட்டுக்கு போலாம் வாடா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டான். ஆனாலும் விடாம அடிச்சு பிடிச்சு கவுண்டர்ல புகுந்து மன்னன் ரஜினி, கவுண்டமணி மாதிரி முன்னேறிப் போய் டிக்கட் வாங்கிட்டு உள்ள போய்ட்டோம். தியேட்டர் உள்ள போக டிக்கட் கிழிக்கும்போதுதான் ஸ்ரீநாத் அந்த கேள்வியக் கேட்டான்.
“மச்சான் கிட் பேக் எங்கடா?”
எனக்கு உசுறே போயிடுச்சு. எங்க விட்டேன்னு சுத்தமா ஞாபகமில்ல. யோசிச்சு பாத்தப்போ ஸ்டேடியம்ல விட்டுருந்தா பிரச்சனையில்ல, எடுத்து வெச்சுறுப்பாங்க. பஸ்ல விட்டுருந்தா? அவ்வளவு தான், என் புது காஷ்மீர் வில்லோ பேட், பேடு, க்ளவுஸ்னு கிட்டத்தட்ட நாலாயிரம் காலி. அப்போ தான் அவன் அடுத்த குண்ட போட்டான்.
“மச்சா பஸ்ல தாண்டா விட்டுருக்கோம், ஸ்டேடியம்ல இருந்து ஓடிவந்து பஸ்ஸேரும்போது பேக் இருந்தது. இறங்கும்போது ரன்னிங்ல இறங்குனதால எடுக்காம விட்டுட்டோம்”.
“போச்சா?” எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் போலிருந்தது. அம்மா கையில் தொடப்பக்கட்டையுடன் கண்முன் வந்து சென்றார்.
எனக்கு இப்படியென்றால் அவன் அழுதேவிடுவான் போலிருந்தது. அவனுடையது இங்க்லீஷ் வில்லொ பேட். அது மட்டுமே ஐய்யாயிரம் ரூபாய்.
“டேய் வாடா போய் பாக்கலாம்”
“இனிமே எங்க போய் பாக்குறது, அவ்வளவுதான் எல்லாம் போச்சு” எனக்கு சுத்தமாக நம்பிக்கையிக்ல்லை.
“ இல்லடா அந்த கண்டக்டருக்கு நம்மள தெரியும். அவர் கண்டிப்பா எடுத்து வெச்சுருப்பாரு. இது லஞ்ச் ப்ரேக் பஸ் இன்னும் கிளம்பியிருக்காது வா”
“ஒரு வேல பஸ் போயிருந்தா?”
“அப்படி போயிருந்தா கூட கிட் பேக டிப்போ’ல குடுத்துட்டு தான் போயிருப்பாங்க, நீ முதல்ல வாடா போய் பாக்கலாம்”
“உனக்கு கண்டிப்பா தெரியுமா?”
”தெரியும் வாடா”
“அப்ப சரி மச்சான், இன்னும் கொஞ்ச நேரத்துல படம் போட்டுறுவாங்க பாத்துட்டு போலாம்”
“டேய்” அடித்துவிடுவான் போல் இருந்தது.
“ஸ்ரீ, மணி 2.35 ஆச்சு இப்போ போனா படம் போடுறதுக்குள்ள திரும்பி வர முடியாது”
“படம் பாக்கலேன்னா போகுது வாடா”
“இல்லடா எவ்வளவு நாளா பேசிட்டுருக்கோம், இந்த படம் ஃபர்ஸ்ட் டே பாக்கனும்னு. எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம், டிக்கட் கூட எடுத்தாச்சு இப்பொ போனா வேஸ்டாகிடும்டா”
“லூசு மாதிரி பேசாதடா. உனக்கு 50 ரூவா டிக்கட் ஐய்யாயிரம் ரூவா பேட்’ட விட பெருசா போச்சா?”
“அதான் எடுத்து வெச்சுறுப்பாங்கன்னு சொல்றல்ல. வா படம் பாத்துட்டு போலாம்”
“போடா ****** , உனக்கு இருந்தாலும் ******** ரொம்ப அதிகம்டா”
அவன் அன்று என்னைப் பார்த்த பார்வை இன்னும் ஞாபகமிருக்கிறது. ஏதோ ஒரு அருவருப்பான எலியனைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு டிப்போவிற்குப் போனான். நான் அமைதியாக படம் பார்க்க சென்றேன்.
அந்த படத்த அவ்வளவு பிடிவாதமா போய் பாக்க காரணம் படத்தோட நாயகனும், இயக்குனரும் தான். அது ஒரு அட்டகாசமான படம். அந்த படம் என்னோட ஆல்டைம் பேவரைட்’ல ஒன்னு. அந்த வருஷம் சிறந்த நாயகனையும் சேர்த்து மொத்தம் ஆறு தேசிய விறுது அந்த படத்துக்கு கிடைச்சது. அந்த படம் ஆடுகளம். அந்த ஹீரோ தனுஷ்.
இந்த காலகட்டத்துல ஒரு நடிகனுக்கு நான் விசிறின்னு சொன்னா அது தனுஷ்க்கு மட்டும் தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ்.

No comments:
Post a Comment