D25னு tag line’னோட வெளிவந்திருக்கும்
தனுஷின் 25வது படம்.
தலைப்பே கதை சொல்லுது. ஏற்கனவே வெளிவந்து ஹிட்டான பாடல்களும், டிரைலரும் ஏற்படுத்திய
எதிர்ப்பார்ப்போடு தியேட்டருக்கு போனா ரோட்ட மறிக்குற அளவுக்கு கட் அவுட், பேனர்னு
ஒரே அதகளம். சத்தியமா தனுஷுக்கு இந்த மாதிரி ஓப்பனிங் இதுக்கு முன்னாடி இருந்ததில்ல.
இத்தனைக்கும் அவர் கடைசியா (தமிழில்) நடிச்ச 4 படமும் சரியா போகல.
படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியுற வரைக்கும் தனுஷோட வெறியாட்டம்
தான். மனுஷன் இறங்கி விளையாடிருக்காரு. டயலாக் டெலிவரி, டான்ஸ், பாடி லாங்குவேஜ் எல்லாமே பக்கா. தம்ம பத்தவச்சுட்டு புருவத்த தூக்கி பன்ச் சொல்லும் அந்த சீன் ஒரு உதாரணம். பாட்டில்ல தண்ணி ஊத்தி வெக்குறது, வீட்ட கூட்டி
பெருக்குறது, செடிக்கு தண்ணி ஊத்துறது, கடைக்கு போறது, அம்மாவோட சீரியல் பாக்குறது,
வேலைக்கு போற தம்பிய பாத்து கடுப்பாவுறது, ஓட்ட வண்டியில் ஊர் சுத்துறது, அப்பாக்கு தெரியாம வீட்டுக்குள்ள திருட்டு
தம்மடிச்சு மாட்டிக்கிறது, சரக்கடிச்சுட்டு வந்து அம்மாகிட்ட தொடப்பக்கட்டயால அடிவாங்குறதுனு
ஒரு வேலையில்லா பட்டதாரி அனுபவிக்குற எல்லா கொடுமைகளும் படத்தில் உள்ளேன் ஐயா.
இந்த கதாப்பாத்திரம் தனுஷுக்கு பொருந்தாம போயிருந்தா தான் ஆச்சரியம்.
எஞ்சினியரிங் மட்டும் இல்ல இந்த படம் பாக்குற எந்த ஒரு வேலையில்லாத, வேலையில்லாமலிருந்த
பட்டதாரியும் இந்த கதாப்பாத்திரத்தோட தன்ன சம்மந்தபடுத்திப்பாங்க. வேலையில்லாம வீட்டுலயே
கெடக்குறப்போ, உச்சி வெயில்ல மொட்ட மாடில படுத்து பொன்னியின் செல்வன் படிக்குற ஒரு
காட்சி போதும் என்ன அந்த கேரக்டரோட ரிலேட் பண்ணிக்க.
படிச்சுட்டு வேலைக்கு போகாத, அதுவும் தம்பி இருக்குற பசங்களுக்கு
படம் ரொம்பவே பிடிக்கும். தனுஷுக்கும் சரண்யாவுக்கும் இடையிளான காட்சிகளும், தனுஷ்
சமுத்திரக்கனி இடையிளான காட்சிகளும் படத்தோட சிறந்த அத்தியாயங்கள். யாரும் கண்டுக்காத இந்த பொறியியல் பட்டதாரி விஷயத்த
பத்தி பேசுனதுக்காக படத்த பாராட்டலாம். ஏன் படத்துல வராமாதிரி விஐபி’னு ஒரு சங்கம்
ஆரம்ப்பிச்சு தனுஷுக்கு விழா எடுத்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.
பக்கத்து வீட்டுப் பொண்ணு அமலா பால்கிட்ட உதார் விடுறது, தம்பி
கார் வாங்குனத பாத்து பொறாம படுறது, அப்பா அம்மா கூட சண்ட போட்டுட்டு வீட்டு மொட்ட
மாடில குடுச்சுட்டு கலாட்டா பன்றதுனு போவுது முதல் பாதி. திடீர்னு ஒரு டிவிஸ்ட் (எதிர்பாத்ததுதான்)
அப்போ இடைவேளை. இதுவரைக்கும் கதைல என்ன நடந்துருக்குனு யோசிச்சு பாத்தா எதுவும் இல்ல.
முதல் பாதில கதை நகரலனு யாராவது சொன்னா தயவுசெஞ்சு நம்பாதீங்க. ஏன்னா முதல் பாதில கதை
ஆரம்பிக்கவே இல்ல.
சரி இரண்டாவது பாதிலயாவது கதை உடனே ஆரம்பிக்குதானு பாத்தா அதுவும்
இல்ல. பத்து நிமிஷத்துக்கு அப்புறம் ஒரு பாட்டெல்லாம் முடிச்சுட்டு சாவகாசமா கதைய ஆரம்பிக்குறாங்க,
உடனே இன்னோரு பாட்டு. சரி கதை என்னானு பாத்தா அதே பழகிப்போன நல்லவன் வாழ்வான் டெம்ப்ளேட்.
திரைக்கதைல எதாவது புதுசா இருக்கா? எதிர்பார்க்க முடியாத திருப்பம் எதாவது இருக்கா?
நெஞ்ச பிழியுற ட்ராஜிடி இருக்கா? சமூகத்துக்கு எதுனா மெசேஜ் சொல்றாங்களா? ம்ஹூம் எதுவும்
இல்ல. அப்போ படம் போறடிக்குதா? அதுவும் இல்ல, காரணம் தனுஷ். இத்தனை இல்லைகளோட இருக்குற
ஒரு கதைய ஒரே ஆளா தாங்குறாரு. இப்படி பாராட்டுற அளவுக்கு தனுஷ் நல்லா நடிச்சிருக்காரானு
கேட்டா, அதெல்லாம் இல்லங்க இந்த படத்துக்கு என்ன தேவையோ அத குடுத்துருக்காரு. சில இடங்களில்
தேவைக்கு அதகிமாகவும் நடிச்சிருக்காரு ;) அவ்ளோ ஏன் ஒரு கட்டத்துல தனுஷ் இந்த படத்துலயும்
சைக்கோவா மாறிடுவாறோனு கூட பயந்தேன்.
அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக் எல்லாரும் அந்தந்த
கதாப்பாத்திரங்களுக்கு பொருந்த்தமா நடிச்சுருக்காங்க. தனுஷே சொல்ற மாதிரி வில்லன பாக்கும்போது
வில்லன் மாதிரி தெரியல, அமெரிக்க மாப்பிள்ளைக் கணக்கா எப்பவும் கோட்டோட சுத்துறாரு.
படத்துல இவர் கோட் போடாத சீன் ஒன்னே ஒன்னுதான். மத்தபடி படம் மொத்தமும் தனுஷோட ஒன்
மேன் ஷோ. எங்க அடிக்கனும், எப்படி அடிக்கனும்னு தெரிஞ்சுகிட்டு அங்க சரியா அடிச்சிருக்காரு.
படத்தோட பெரிய ப்ளஸ் அனிருத்தோட இசை. இவரோட Contibution இல்லன்னா
ரெண்டாவது பாதி தப்பிச்சுருக்காது. ஹைபிட்ச்சுல இவர் “தடை. அதை உடை’னு கத்தும்போது
தியேட்டரே அதிருது. அடுத்ததா படத்துல எனக்கு ரொம்ப பிடிச்சது தனுஷோட, கன்னா பின்னா
டான்ஸ். வெட்டிப்போட்ட பல்லி வால் மாதிரி ஆடிகிட்டே இருக்கார். “நான் வெறியானா விருமாண்டி”னு பல்ல கடிச்சுட்டு மீசைய முறுக்கும் போது விசில் சத்தம் காதக் கிழிக்குது. இந்த வருஷம் நடக்குற கல்லூரி விழாக்கள் எல்லாத்துலயும் ”வாட்ட கர்வாடும், ஊதுங்கடா
சங்கும், விஐபியும் ஆக்கிரமிக்கும்.
அதே மாதிரி வசனம். ”வேலைக்கு போகலனா, நாம பேர் வெச்சு வளர்த்துற
நாய் கூட நம்மள மதிக்காது”
“பேர்ல கூட partiality. அவனுக்கு மட்டும் ஹீரோ பேரு கார்த்திக்.
எனக்கு வில்லன் பேரு ரகுவரன்”
“எனக்கு கார்த்திக்க விட ரகுவரனதான் பிடிக்கும்”
“சாரீப்பா நான் கொஞ்சம் General audience மாதிரி
நடந்துகிட்டேன்” வகையறா வசனங்களோடவே டிரைலர்ல பார்த்த வசனங்களுக்கும் தியேட்டர்ல செம
அப்ளாஸ். முதல் நாள் படத்துக்கு போறதுல இதுதான் பிரச்சன. விசில் சத்தத்துல சில வசனங்கள்
கேக்கவே இல்ல.
சமுத்திரக்கனி ஒரு இடத்துல “இவன் அம்மா செண்டிமெண்ட் என்னாலயே
பொருத்துக்க முடியல”னு சொல்லுவாரு. அதேதான் நானும்சொல்றேன். மொத்தத்துல படம் ஒரு ஃபீல்
குட் எண்டர்டெயினர். ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் ஒரு ஞாயித்துக்கிழமை மத்தியானம்
இந்த படத்த டிவில போட்டா தாராளமா பாக்கலாம்.
இந்த படத்தோட வெற்றி, படத்துக்கு கிடைச்சுருக்குற வரவேற்புலயே தெரியுது. அது மட்டுமில்லாம சமீபத்துல இதை விட
பெரிய படம் எதும் ரிலீசாகுற மாதிரி தெரியல. அதனாலயே இந்த வருஷத்தோட மிகப்பெரிய வெற்றிப்படங்கள்
வரிசைல இதுவும் ஒன்னா இருக்கும். D25 இதை விட
சிறப்பா அமைய முடியுமானு தெரியல. ஆடுகளத்துக்கு அப்புறம் தனுஷ் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்திருப்பதில் மகிழ்ச்சி.
படத்தின் டிரைலரைப் பார்க்க
படத்தின் டிரைலரைப் பார்க்க
பி.கு.
1. இது விமர்சனமெல்லாம் இல்லீங்கோ. எனக்கு பிடிச்ச படத்துல, எனக்கு பிடிச்ச விஷயங்கள, எனக்கு தெரிஞ்சா மாதிரி எழுதீருக்கேன்.
2. முன்னதா இந்த படத்தோட Morning
show’க்கு
டிக்கெட் கிடைக்காத்தால சதுரங்க வேட்டை படத்துக்கு போயிருந்தேன். அந்த படமும் ரொம்ப
நல்லாருக்கு.
.jpg)




wow! super விமர்சனம் :-))
ReplyDeleteamas32
ரொம்ப நன்றிம்மா..
DeleteVery nicely written - it is indeed a good review - my sentiments exactly as you have written. I liked the movie too, just for Dhanush :)
ReplyDeletethank you so much sir. it gives lot of confidence and tends me to write more and well. thanks again :)
Deletenice attempt:)
ReplyDelete